தருமபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வு நடைபெற்றுவருகிறது. தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இன்று நடைபெற்ற ஆயிரத்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சீனிவாசன் - வள்ளி தம்பதியின் மகன் கவின் பிரசாத்தும் கலந்துகொண்டு ஓடியுள்ளார்.
அப்போது அவர் நிலைதடுமாறி மூர்ச்சையாகி கிழே விழுந்தார். அவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.