தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவரிடம் தகராறு செய்த இளைஞரின் வீடியோ வைரல்! - செவிலியர் இளைஞர் தகராறு வீடியோ

தருமபுரி: ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர், செவிலியரிடம் மதுபோதையில் தகராறு செய்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

dharmapuri-youngster-brawled-with-nurse-video-got-viral
மருத்துவரிடம் தகராறு செய்த இளைஞரின் வீடியோ வைரல்!

By

Published : Mar 3, 2020, 8:27 PM IST

Updated : Mar 3, 2020, 8:55 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பட்டக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (28). தனது உறவினர் ஒருவருடன் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

சுகாதார நிலையத்தில், சிகிச்சை தாமதம் செய்வதாகக் கூறி மருத்துவர், செவிலியர் ஆகியோர் பெயர்களைக் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் மதுபோதையில் இருந்த இளைஞர் சதாசிவம் செவிலியரிடம் கடுமையான வார்த்தைகளால் பேசி உள்ளதாக தெரிகிறது.

மதுபோதையில் ரகளை செய்த சதாசிவத்தின் தந்தை கிருஷ்ணனிடம் ஏரியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துள்ளனர்.

சதாசிவம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகராறு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது.

மருத்துவரிடம் தகராறு செய்த இளைஞரின் வீடியோ வைரல்!

இதையும் படிங்க:ராஜிவ் நினைவிடத்தில் சீமான் குரலில் டிக்-டாக்: சிக்கலில் நாம் தமிழர் நிர்வாகி

Last Updated : Mar 3, 2020, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details