தர்மபுரி, அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அவ்வை வழி ரயில்வே கேட் அருகே ரயில் பாதையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்துகிடந்தார்.
இதையடுத்து, அவர் காலை 5 மணிக்குச் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என ஏ. ஜெட்டிஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராசு தர்மபுரி ரயில்வே காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.