தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவின்போது நத்தமேடு, அய்யம்பட்டி ஜாலி புதூர் ஆகிய பகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக சார்பில் மறுவாக்குப்பதிவு நடத்த, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் அந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.
தருமபுரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது..! - தருமபுரி
தருமபுரி: மக்களைவைத் தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளுக்குட்பட்ட எட்டு வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.
அதன் அடிப்படையில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த எட்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 12 பேர் வாக்களிக்க உள்ளனர். இதனை முன்னிட்டு இங்கு 566 காவல் துறையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரது தலைமையில் தொடர்ந்து ரோந்து பணியும் நடைபெற்றுவருகிறது.