தருமபுரி மாவட்டத்தில் இளைஞர்கள் புல்லட் வாகனத்தில் அதிக இரைச்சல் தரும் சைலன்சர்களைப் பொருத்தி சாலையில் அதிக ஒலி எழுப்பிவந்தனர்.
சாலையில் வேகமாக வாகனத்தை ஓட்டி மற்றவர்களை அச்சுறுத்தும்வகையில் புல்லட் ஓட்டிவந்த நபர்களை தருமபுரி நகர காவல் துறையினர் வாகன தணிக்கையில் பிடித்தனர்.
இருசக்கர வாகனத்தில் அதிக அதிர்வை ஏற்படுத்தும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்து அவர்கள் வாகனத்திலிருந்து மாற்றம்செய்யப்பட்ட சைலன்சர்களை அகற்றிவிட்டு அரசு அறிவுறுத்திய சைலன்சர்களைப் பொருத்திய பிறகு வாகன ஓட்டிகளுக்கு வாகனத்தை காவல் துறையினர் விடுவித்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுபவர்கள், அதிக ஒலி எழுப்பும் வாகனங்களைத் தணிக்கைசெய்து பறிமுதல் செய்துவருகின்றனர்.