தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் சுப்பிரமணி(49). இவர் அதே பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை - கோவில் பூசாரிக்கு போக்ஸோ! - போக்சோவில் பூசாரி கைது
தர்மபுரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை-கோவில் பூசாரிக்கு போக்ஸோ!
இந்நிலையில், இன்று காலை கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமிக்கு சுப்பிரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரணை செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி சுப்பிரமணியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.