தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MP Senthil Kumar: இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தருமபுரி எம்.பி! - Dharmapuri MP Dr S Senthilkumar

தருமபுரி மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி பதவி நியமனம் குறித்து தருமபுரி எம்.பி. ட்வீட் செய்துள்ளது திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 6, 2023, 1:25 PM IST

Updated : Jul 6, 2023, 3:39 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்ட திமுகவில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பெயர் பட்டியல் நேற்று(ஜூலை 5) வெளியானது. அப்பட்டியலில் திமுக கிழக்கு மாவட்ட அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.சேகர் மகன் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக சிவகுரு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமை அறிவித்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் நியமனம் செய்ததில், இதுவரை கட்சியில் உழைத்த நபர்களுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "இளைஞர் அணியினைப் பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தருமபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பது வேதனை அளிக்கிறது. இதேபோல் நடந்து விடக்கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க:பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!

இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த ட்வீட்டை பார்த்துள்ளனர். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இவ்வாறு கட்சி உறுப்பினர் நியமனம் குறித்து பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து பேசிய திமுக இளைஞா் அணியைச் சோ்ந்தவா் ஒருவா், "தருமபுரி எம்.பி. செந்தில்குமார் கட்சித் தலைமைக்கு உழைப்பவர்களை அவர்கள் உழைப்புக்கேற்ற பதவி தலைமை தரும் என்று உறுதியாக நம்புபவர். ஆனால், தற்போது வெளிவந்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் கட்சி தலைமைக்கு உழைப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. கட்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் மாற்றுக்கட்சிகள் அதாவது பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக திமுகவில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பொது சிவில் சட்டம் என்பது தேன் கூட்டில் கையை வைப்பது போன்றது - ஜவாஹிருல்லா எம்எல்ஏ

Last Updated : Jul 6, 2023, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details