தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி இல்லையா? - எம்.பி.செந்தில்குமார் - viral video

தருமபுரி: முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கச் சென்ற தருமபுரி எம்.பி.செந்தில்குமாரை காவல்துறையினர் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

dharmapuri
dharmapuri

By

Published : Aug 20, 2020, 10:12 PM IST

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க சென்ற தருமபுரி எம்பி செந்தில்குமாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், எம்.பி.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மக்கள் பிரதிநிதியாக, மக்களவை உறுப்பினர் என்ற முறையில், கலந்துகொள்ள சென்றேன். வரும் வழியிலேயே என்னை காவல்துறையினர் வழிமறித்து தடுத்தி நிறுத்தினர்.

அரசாணையில், முதலமைச்சரிடம் மனு அளிக்க செல்வோர் கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, அந்த அரசாணை பற்றி தமக்கு விளக்கமளிக்க வேண்டுமென கேள்வி எழுப்பினேன். ஆனால், காவல்துறையிடம் உரிய ஆதாரம் இல்லை.

காவல்துறைக்கும் எம்பிக்கும் வாக்குவாதம்

அதிமுகவினருக்கு தெரிவித்ததுபோல் தனக்கும் தெரிவித்திருந்தால் நானும் கரோனா பரிசோதனை செய்திருப்பேன். ஒரு மக்களவை உறுப்பினர் முதலமைச்சரை சந்தித்து மனு வழங்க அனுமதி இல்லையா?" என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க:காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி இரண்டு இளைஞர்கள் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details