தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜை நடைபெற்று வருகிறது.
தருமபுரி சிவசுப்ரமணிய கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை - dharmapuri
தருமபுரி : மழைப் பெய்ய வேண்டி சிவசுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் கொப்பரை தண்ணீரில் மூழ்கி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சிறப்பு யாகம்
இதன் ஒருப்பகுதியாக தருமபுரி டவுன் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் வளாகத்தில் மழை வேண்டி பெரிய கொப்பரையில் தண்ணீரை நிரப்பி அதில் கோவில் குருக்கள் நான்கு பேர் கழுத்தளவு தண்ணீரில் வருண மாலா மந்திரம் 108 முறை உச்சரித்து பிரார்த்தனை செய்தனர். பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் திருவாசகப் பாடல்களை பாடியும் பிரார்த்தனை செய்தனர்.