தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Dharmapuri Accident: விதி செய்த சதி; கண்முன்னே கணவர், மகளை இழந்த இளம்பெண்!

தர்மபுரி பொன்னேரியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று கிணற்றில் விழுந்த விபத்தில் (Dharmapuri Accident) தாய் உயிர் தப்பிய நிலையில், தந்தையும் மகளும் உயிரிழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dharmapuri Accident, dharmapuri jeep accident, தர்மபுரி ஜீப் விபத்து
கிணற்றில் விழுந்த ஜீப்பை மீட்கும் தீயணைப்புத் துறையினர்

By

Published : Nov 17, 2021, 3:48 PM IST

தர்மபுரி: சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த வீரன் என்பவர் பெங்களூருவில் பணியாற்றி வந்தார். அவர் தனது மனைவி உமா, மகள் சுஷ்மிதா உடன் தனது சொந்த ஊரான மேட்டூருக்குச் சென்றுவிட்டு மீண்டும் நேற்று (நவ. 16) மதியம் 2.45 மணியளவில் தனக்குச் சொந்தமான ஜீப்பில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பொன்னேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வேகமாக ஓடியது. இதில் திடீரென ஜீப்பின் கதவு திறந்ததில் வீரனின் மனைவி கீழே விழுந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

கிணற்றில் அதிக தண்ணீர்

ஜீப்பில் இருந்த வீரன், அவரது மகள் அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் விழுந்து மூழ்கினர். ஜீப் கிணற்றில் விழுந்த சம்பவத்தை அறிந்த பாலக்கோடு தீயணைப்புத்துறையினர் கிணற்றிலிருந்து ஜீப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் விழுந்த ஜீப்பை மீட்கும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்

சம்பவ இடத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் மீட்கும் பணியைப் பார்வையிட்டு தீவிரப்படுத்தினர். கிணற்றில் நீர் அதிகமாக இருந்ததால் ராட்சத மின் மோட்டார்களை பொருத்தி நீரை வெளியேற்றினர்.

தீயணைப்புத்துறையினரின் ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப்பின் கிணற்றில் விழுந்த ஜீப், ஜீப்பில் இருந்த வீரன், அவரது மகள் சுஷ்மிதாவை சடலமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்களை உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்தவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி: 7 ஆண்டுகளாக தனி ஆளாக போராடும் 70 வயது மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details