தருமபுரி மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய 25 வயது ஆண் ஒருவருக்கு நேற்று (ஆக.25) கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.
தருமபுரியில் கரோனாவால் தலைமை தபால் நிலையம் மூடல்! - post office employee corona
தருமபுரி: தலைமை தபால் நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட கரோனா தொற்றால் இரண்டு நாள்கள் அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையத்தில் பணியாற்றிய நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் இன்று நாளை, இரண்டு நாள்கள் மூடப்படுகிறது.
இதையடுத்து அஞ்சல் நிலையத்தில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும், மாவட்டத்தின் உள்ள மற்ற பகுதியில் உள்ள அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் அனுப்பும் பணி தொய்வு இல்லாமல் நடைபெற மாற்றுவழி செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அஞ்சலக சேமிப்பு வங்கி மூலம் பயனடைந்த 30,000 தென்காசி மக்கள்!