தர்மபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த துறையில் பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக மாணவிகளிடம் இருந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளிக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் மூன்று மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்துள்ளார். விசாரணைக் குழுவில் மருத்துவர் கண்மணி கார்த்திகேயன், தண்டர் சீப், சாந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மாணவிகளிடமும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமாரிடமும் விசாரணை செய்துள்ளனர்.