தர்மபுரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஏ. ஜெட்டிஅள்ளி வாக்குச்சாவடி மையத்தில், தர்மபுரி மாவட்டத் தேர்தல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா வாக்களித்தார்.
மாவட்டத் தேர்தல் அலுவலர் கார்த்திகா, காலை முதல் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டத் தேர்தல் அலுவலர் கார்த்திகா எர்ரம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிப்பு மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில், பதற்றமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்புப் பணிகள், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, வாக்காளர்களுக்கு கிருமிநாசினி தெளித்தல், கையுறை வழங்குவதும் நடைபெறுகிறதா என்பதை நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினார்.
இதையும் படிங்க: உதயநிதி சட்டையில் உதயசூரியன் - தகுதி நீக்க அதிமுக கோரிக்கை!