தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிபட்டி அரூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல்களில் ஆயிரத்து 787 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் வாக்கு சாவடிகளில் இருந்து தீவிர போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
தருமபுரி வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைப்பு
தருமபுரி: மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டிகள் அறையில் பத்திரமாக வைத்து தேர்தல் பார்வையாளர்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைத்தனர்.
DPI
இன்று வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி முன்னிலையில் இன்று மாலை சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.