தர்மபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவி ஏற்றுக்கொண்ட திவ்யதர்ஷினி ஒவ்வொரு தாலுகாவிலுள்ள மருத்துவமனைகளை தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு! - தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி: பாலக்கோடு அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு நடத்தினார்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!
நேற்றைய முன்தினம் (மே 20) அரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இன்று பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் .
பாலக்கோடு அரசு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு எவ்வாறு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்தும் நோயாளா் வருகை பதிவேடு பராமரிப்பு குறித்தும் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.