தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் காயமடைந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு! - forest area

தருமபுரி: அரூர் சாலை விபத்தில் காயமடைந்த மானை மீட்ட இளைஞர்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தருமபுரி

By

Published : May 1, 2019, 8:12 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் வனப்பகுதியில் அதிக அளவிலான மான்கள் வாழ்ந்து வருகின்றன. அவ்வனத்தின் மையப்பகுதியில் தருமபுரி-அரூர் பிரதான சாலை அமைந்துள்ளது. . இந்நிலையில், இன்று கொளகம்பட்டி காப்புக்காட்டில், ஆண்டிப்பட்டுபுதூர் பகுதியில் விபத்தில் பின் கால்களில் அடிபட்டு நடக்கமுடியாமல் புள்ளிமான் ஒன்று தவித்து வந்தது.

இதனையடுத்து விபத்தில் காயமடைந்த புள்ளிமானைக் கண்ட இளைஞர்கள் மானை மீட்டு, வனத்துறையினருக்கு தகவலளித்தனர். பின்னர் அந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மான்கள் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்தில் மாட்டிக்கொள்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details