தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு விதி மீறல்: திமுக எம்.எல்.ஏ உள்பட 250 பேர் மீது வழக்கு - case against 250 dmk members include 2 mlas

தருமபுரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Curfew violation: case against 250 dmk members include 2 mlas
Curfew violation: case against 250 dmk members include 2 mlas

By

Published : Nov 3, 2020, 4:27 PM IST

தருமபுரி: 2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தருமபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர்களாக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று தருமபுரி திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் தருமபுரி நகரப்பகுதியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தனது ஆதாரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்தார்.

இதன்காரணமாக, நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஊரடங்கு விதிகளை மீறுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தடங்கம் சுப்பிரமணி மற்றும் இன்பசேகரன் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details