தருமபுரி மாவட்டம் மொரப்பூர் எலவடை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகத்தினர் எலவடை கிராமத்தை தனிமைப்படுத்தி அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளை கரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
தருமபுரியில் முதல் முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி - தமிழ்நாட்டில் கரோனா
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் முதலாக ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-first-time-in-dharmapuri
பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் அத்தியாவசியப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று திரும்பியதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்!