தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருந்து தருமபுரி வந்த கரோனா! - சென்னையில் இருந்து தருமபுரி வந்த கரோனா

தருமபுரி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர் சென்னையில் இருந்து, அவரது சொந்த ஊரான தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

By

Published : May 12, 2020, 1:10 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்று பாதித்தவர்கள் மூலம் சமூகப்பரவல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக, மாவட்ட எல்லைகளுக்குள் நுழையும் அனைத்து வகையான வாகனங்களில் வருபவர்களையும், செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை மையத்திற்கு, அழைத்து வந்து சோதனை செய்த பிறகே, அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்காக மாவட்டத்திற்குள் நுழைவதற்கான பிரதான இடங்களில் 10 சோதனைச் சாவடிகள் அமைத்து, 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் தருமபுரியில் இருவருக்கு புதியதாக கரோனா வைரஸ் தொற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் காவலராகப் பணியாற்றிவரும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்த காவலரை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். அவரின் வீடு அமைந்துள்ளப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் சுகாதாரத்துறை, சென்னையில் வைரஸ் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தாமல், சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கியது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வைரஸ் பரிசோதனை

சென்னை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் சென்னையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்றுவருகிறார். சென்னையில் உள்ள நபா் தருமபுரியில் உள்ளது போல, சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்று குறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும் தகவல்களில் தொடக்கம் முதலே, பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரோனா போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்தியா போஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details