தருமபுரி மாவட்டம் செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தருமபுரி மாவட்டத்தின் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளான தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படவுள்ள செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் அங்குள்ள வசதிகள், ஆய்வு விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்தில்நடைபெறும்.