தர்மபுரியில் கரோனா தடுப்பு பணிகள் மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி.கார்த்திகா தலைமையில் இன்று (ஏப்.9) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதில், “அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.