தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் தொற்று எண்ணிக்கை குறையவில்லை.
இந்நிலையில் புதிதாக மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற திவ்யதர்ஷினி, நேற்று (மே.20) தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.