தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்! - கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

தர்மபுரி: கர்நாடகாவில் இரவு ஊரடங்கால் இரவு நேரங்களில் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூருக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
பெங்களூருக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

By

Published : Dec 24, 2020, 6:56 PM IST

கர்நாடகாவில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது அம்மாநில அரசு. இந்நிலையில், ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு இரவில் செல்லும் 30க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப் பட்டதால் மத்திய அரசு அந்நாட்டிற்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது. அதுபோல கரோனா தொற்றீன் தீவிரத்தை உணர்ந்து கர்நாடகா மாநிலம், இன்று (டிச.24) மாலை ஆறு மணி முதல் வரும் ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

அதன்படி தினமும் இரவு 11: 00 முதல் காலை 5:00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். பால், காய்கறி, மருந்து ஆகியவற்றினை வாங்க வாகனங்களில் சென்று வரலாம். மேலும் மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அவசரக்கால பணிகளில் இருக்கும் நிறுவனங்கள் மட்டும் இரவிலும் திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது அம்மாநில அரசு.

அதுபோல, இரவு 11:00 மணிக்கு மேல் கர்நாடகா மாநில அரசு பஸ்கள், பெங்களூரு நகர பஸ்கள், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும். இதனால் ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தெரிவித்தார்.

மேலும் சென்னை, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை வாகனங்கள் செல்லும். குறிப்பாக 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான, ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:தருமபுரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details