தருமபுரி: அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தடங்கம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியின் பின்புறம், மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது உயிரிழந்த நபா் ஒட்டப்பட்டி PWD காலனியைச் சேர்ந்த ஜெயவேல் என்பதும், இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார் எனவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் உயிரிழந்த நபரின் அக்கா கணவர் திருப்பதி மற்றும் உயிரிழந்த ஜெயவேலுவின் தந்தை கோவிந்தசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.