தருமபுரி மாவட்டம் தொப்பூர் தர்கா அருகே அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரன், பழனி, ராமன் மற்றும் காசி என நான்கு மகன்கள் உள்ளனர். இவருக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் தொப்பூரில் உள்ளது. ராமன் என்பவர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று விட்டார். மற்ற மூன்று பேரும் 4 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொண்டனர்.
நிலத்தகராறு காரணமாக அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி
தர்மபுரி: நிலத்தகராறு காரணமாக சொந்த தம்பியே அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம், தொப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரன் எல்லை பாதுகாப்புப் படையிலிருந்து ஓய்வு பெற்று, விவசாயம் செய்து வந்துள்ளார். விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் ஈஸ்வரனுக்கும், பழனிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இன்று மாலை ஈஸ்வரன் தனது விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச செல்லும்போது, வழக்கம் போல பழனிக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பின்னர், ஆத்திரமடைந்த பழனி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஈஸ்வரனின் தலையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற பழனியை தொப்பூர் காவல் அலுவலர் ராஜ்குமார் கைது செய்தார். இறந்த ஈஸ்வரனுக்குச் சந்திரா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.