தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - A student Suicide in Dharmapuri Medical College

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 6, 2022, 6:47 PM IST

தர்மபுரி:சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி அடுத்த பெரும்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் இளம்பரிதி(21) தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்த நிலையில், நேற்று (நவம்பர் 6) தற்கொலை செய்துகொண்டார். அதோடு தற்கொலை கடிதத்தில் தன்னால் படிக்க முடியவில்லை. அதற்காகவே தற்கொலை செய்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதுகுறித்து தர்மபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று (நவ.6) அவரது உடலுக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவா்கள் உடன் பயின்ற மருத்துவ மாணவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் இளம்பரிதியின் உடல் அவரது தாய் பிரேமலதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க:உயிரைப்பறித்த கேட்; மின்சாரம் தாக்கி வயதான தம்பதி பலி!

ABOUT THE AUTHOR

...view details