தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பெரும்பாலான மலைக்கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதி இல்லை. அப்படி ஒரு பகுதியான கோட்டூர் மலை கிராமத்திற்கு, கழுதைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியில் கடந்த 45 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சின்னராஜ், மலை கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை போன்றவற்றை, மாதத்தில் பதினைந்து நாட்கள் இவ்வாறு கொண்டு செல்வதற்காகவே, ரஜினி, கமல், அஜீத், விஜய், சரத்குமார் என்ற 5 கழுதைகளை வளர்த்து வருகிறார்.
தேர்தல் சமயங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு தேவையான உபகரணங்களையும், கழுதைகளைக் கொண்டே மலைப்பகுதியின் அடிவாரத்திலிருந்து மலை மேலே உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்கிறார் சின்னராஜ்.