தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுத பூஜை சீஷன்: சாம்பல் பூசணி பெருமளவு ஏற்றுமதி; விவசாயிகள் மகிழ்ச்சி - Autha Pooja Season and Large Export of Gray Pumpkin and Farmers happy

ஆயுத பூஜையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு பகுதியில் இருந்து சாம்பல் பூசணி பெங்களூரு பகுதிகளுக்கு பெருமளவு ஏற்றுமதியாகிறது.

சாம்பல் பூசணி பெருமளவு ஏற்றுமதி
சாம்பல் பூசணி பெருமளவு ஏற்றுமதி

By

Published : Oct 11, 2021, 10:34 PM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், கம்மாளப்பட்டி, சோமனாஅள்ளி, புலிக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பெருமளவு சாம்பல் பூசணி சாகுபடி செய்கின்றனர்.

பொதுவாக இந்த சாம்பல் பூசணிகளை ஆயுத பூஜை பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும் வகையில் விவசாயப்பணிகளில் ஈடுபடுவது விவசாயிகளின் வழக்கம்.

ஆயுத பூஜையின்போது திருஷ்டி சுற்றுவதற்கு சாம்பல் பூசணிக்காய் பயன்படுத்தப்படுவதால், தர்மபுரி, பாலக்கோடு பகுதியில் இருந்து பெங்களூரு, சேலம், கோவை உள்ளிட்டப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆகையால், இந்த சாம்பல் பூசணிக்காய்களை வியாபாரிகள் விவசாயிகளின் விளைநிலங்களிலேயே மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.

சாம்பல் பூசணி பெருமளவு ஏற்றுமதி; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒரு கிலோ 15 ரூபாய்க்கு ஒரு டன் சாம்பல் பூசணி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு சாம்பல் பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.1 கோடி மதிப்புள்ள நிலங்களைப் பொது ஊருணிக்குத் தானமாக கொடுத்த குடும்பங்கள்

ABOUT THE AUTHOR

...view details