தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்பாரப்பட்டியில் தூக்கிட்டு ஓட்டுநர் தற்கொலை! - பாப்பாரப்பட்டியில் ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

auto driver suicide, auto driver suicide in dharmapuri, பாப்பாரப்பட்டியில் ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை, suicide in dharmapuri
auto driver suicide in dharmapuri

By

Published : Dec 18, 2019, 3:14 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த வேப்பிலைஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் சிவா (28) ஓட்டுநராக பணிபுரிகிறார். சிவாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் வேப்பிலைஅள்ளி கிராமத்திலுள்ள திருமணமான ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களுடைய பழக்கம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிவா மீது பெண்ணின் கணவர் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். இதற்கு பயந்த சிவா பத்து நாட்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

நிர்பயா வழக்கு: அக்‌ஷய் குமாரின் சீராய்வு மனு தள்ளுபடி!

ஆனால் கிணற்றில் விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். திடீரென இன்று அதிகாலை 5 மணியளவில் வேப்பிலைஅள்ளி கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் புளியந்தோப்பில் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கியபடி இறந்து கிடந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் பாப்பாரப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தூக்கிட்ட நிலையில் கிடந்த 60 வயது மூதாட்டி - போலீசார் விசாரணை!

விரைந்து வந்த பாப்பரப்பட்டி காவல் துறையினர் சடலத்தை கீழே இறக்கி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என தற்போது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details