தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வேண்டும்' - அரூர் எம்எல்ஏ கோரிக்கை! - tamilnadu train updates

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வேண்டும் என அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வேண்டும் என அரூர் எம்எல்ஏ கோரிக்கை
மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வேண்டும் என அரூர் எம்எல்ஏ கோரிக்கை

By

Published : Apr 9, 2023, 7:18 PM IST

Updated : Apr 9, 2023, 7:52 PM IST

மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த வேண்டும் என அரூர் எம்எல்ஏ கோரிக்கை

தருமபுரி: சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயிலை நேற்று ( ஏப்.08 ) எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்டோர் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தே பாரத் ரயிலில் மொரப்பூர் வந்து இறங்கினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், “பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பயணம் செய்தோம். இந்தப் பயணம் மிகவும் இனிமையாகவும் வேகக் கட்டுப்பாடுடன் கூடிய பயணமாக இருந்தது.

தொழில் நகரத்திற்கும் தலைநகரத்திற்கும் இணைக்கும் முக்கியமான ரயில் நிலையம் மொரப்பூர். மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று சென்றால் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். ஏற்கனவே பழனி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மங்களூர் எக்ஸ்பிரஸ் கொரோனா காலத்திற்கு பிறகிலிருந்து மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே பொது மேலாளரிடம் கடிதம் வழங்கி இருக்கிறேன்.

வந்தே பாரத் ரயில் தினமும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றால் தொழில் செய்ய கோயமுத்தூர் திருப்பூர் ஈரோடு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும், தலைநகருக்கு மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை செல்பவர்களுக்கும் பெரும் வசதியாக இருக்கும்.

மேலும், வந்தே பாரத் ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றால் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். எனவே மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை - டெல்லி ராஜதானி விரைவு ரயிலில் திடீர் புகை - பயணிகள் பதற்றத்தால் நடுவழியில் ரயில் நிறுத்தம்!

Last Updated : Apr 9, 2023, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details