தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி வானொலிக்கு வந்த சிக்கல் - எம்பி செந்தில்குமாரிடம் வானொலி நேயர்கள் கோரிக்கை - dharmapuri district news

மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட வானொலி நிலையங்களில் தயாரிக்கப்படும் உள்ளூர் நிகழ்ச்சிகளை நிறுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமலுக்கு வரவுள்ள நிலையில், தர்மபுரி வானொலி நிலையத்தில் உள்ளூர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கமாறு தர்மபுரி மக்களவை உறுப்பினரிடம் வானொலி நேயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

allindiaradio-programme-change-chennai-relay
தர்மபுரி எம்பியிடம் கோரிக்கை விடுக்கும் வானொலி நேயர்கள்

By

Published : Sep 18, 2021, 5:07 PM IST

தர்மபுரி:தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி பகுதிகளில் அகில இந்திய வானொலி நிலையத்தில் பிரைமரி சேனல் முதல் அலைவரிசை வானொலி நிலையங்கள் உள்ளன. இவ்வானொலி நிலையங்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு தேவையான விவசாயம், கல்வி, சமுதாய சிந்தனைகள், நாடகம், கிராமத்துஇசை, கலை, இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் அந்தந்த வட்டார மொழிகளிலேயே தயார் செய்யப்பட்டு இதுவரை ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து இத்தகைய வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு சென்னையிலிருந்து நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மற்ற வானொலி நிலையங்கள் அஞ்சல் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி வானொலி நிலையம்

உள்ளூர் பணியாளர்களுக்கு வேலையிழப்பு

இதன் காரணமாக மற்ற வானொலி நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணிவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தந்த பகுதி உள்ளூர் மக்களுக்கான நிகழ்ச்சி தயாரிப்பு நிறுத்தப்பட்டு உள்ளுா் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது. உள்ளூர் நிகழ்ச்சிகளையும் உள்ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கான வேளாண் செய்திகள், அரசு அலுவலா்களின் அறிவிப்புகள், அரசுத்திட்டங்களை மக்கள் அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.

திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி போன்றவை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மத்திய அலை, அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது, மத்திய அலை வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும் ரசிகர்கள் மிக மிகக் குறைவு பொதுமக்கள் எஃப்.எம் அலைவரிசை வழியாக வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர் . இரைச்சலோடு வரும் மத்திய அலை வானொலியை பொதுமக்கள் தற்போது கேட்பது இல்லை.

பண்பலையாக தரம் உயர்த்தப்படவேண்டும்

இத்தகைய வானொலிகளை எஃப்.எம் வானொலி நிலையங்களாக உயர்த்தினால் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதனால் விளம்பர வருவாயும் அரசுக்கு வரும். ஆனால், அரசு அலுவலர்கள் விளம்பர வருவாய் குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை மட்டும் நிறுத்திவிட்டு ஒளிபரப்பை மட்டும் சென்னை நிகழ்ச்சியை அஞ்சல் செய்வதால் இந்த ஒளிபரப்பு யாருக்கும் பயனற்று உள்ளது.

தர்மபுரி வானொலி நிலையம்

மேலும், காரைக்கால், நாகர்கோவில், தர்மபுரி போன்ற உள்ளூர் வானொலி நிலையங்களிலும் நிகழ்ச்சிகள் சென்னை நிகழ்ச்சிகளோடு இணைக்கப்பட உள்ளது.

தர்மபுரி வானொலி நிலையம்

தர்மபுரி வானொலி நிலையம் தொடங்கப்பட காரணம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தில் முன்னேறவும், கல்வியறிவு, விவசாயம் குறித்த செய்திகள் மக்களுக்கு சென்றடையும் நோக்கிலும் மத்திய அரசால் வானொலி நிலையம் தொடங்கப்பட்டு நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய உள்ளூர் வானொலி நிலையங்களை சென்னை வானொலியுடன் இணைக்கப்படும்போது இங்குள்ள விவசாயிகள், விவசாயம் தொடர்பான தகவல்கள் கிடைப்பது பாதிக்கப்படுகிறது.

எனவே, உள்ளூர் வானொலி நிலையங்கள் மற்றும் பிரைமரி வானொலி நிலையங்களை அந்தந்தப் பகுதிகளில் இருந்து நிகழ்ச்சி தயார் செய்து ஒலிபரப்பும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டுமென்றும், தமிழ்நாட்டில் வானொலி ஒலிபரப்பை பழைய நிலையிலேயே தொடர செய்து மத்திய அலை வானொலி நிலையங்களை பண்பலை வானொலி நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும் எனவும் வானொலி நேயர்கள் தர்மபுரி மக்களவை உறுப்பினா் செந்தில்குமாரிடம் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:அரசு ஊடகங்களின் ஆலோசகர்களாக பாஜகவினரை நியமிக்க முடிவு!

ABOUT THE AUTHOR

...view details