தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலிண்டர் வெடித்து வயதான தம்பதியினர் உயிரிழப்பு - Aged couple's died in gas cylinder blast

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வயதான தம்பதியினர் கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தனர்.

Dharmapuri
Gas cylinder blast

By

Published : Nov 26, 2020, 10:55 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வரதகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (77) இவரது மனைவி ராமாயி (75) இவர்களுக்கு தருமன் (55 ) ராமன் ( 54) சிவஞானம் (45) முருகேசன் உள்ளிட்ட நான்கு மகன்கள்.

இந்த நிலையில் மகன்கள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். வெங்கடாசலம் மனைவியுடன் தனியாக வசித்து வருகின்றனர். ராமாயி மாற்றுத்திறனாளி இந்நிலையில் இன்று (நவ 26) மாலை மனைவிக்கு தேனீர் தயாரிக்க வெங்கடாசலம் சிலிண்டரை பற்றவைத்தப் பொழுது, ஏற்கனவே சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியாமல் பற்ற வைக்க முயற்சி செய்தபோது சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு முழுவதும் நொறுங்கியது.

இதில் ராமாயி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார், வெங்கடாசலம் பலத்த காயமடைந்தார், உடனடியாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து இறந்த ராமாயின் உடலை மீட்டனர்.

படுகாயமடைந்த வெங்கடாசலத்தை பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர், பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details