தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2021, 12:00 PM IST

ETV Bharat / state

தர்மபுரி எம்பி நடன காணொலியை கேவலப்படுத்துவதாக நினைத்து வைரலாக்கிய எதிர்க்கட்சி!

தர்மபுரி: திமுகவைச் சேர்ந்த தர்மபுரி எம்பி, எம்எல்ஏ நடனத்தைக் கேவலப்படுத்துவதாக நினைத்து, காணொலியை வைரலாக்கியுள்ளது எதிர்க்கட்சியின் தொழில்நுட்ப அணி.

ஸ்டாலின் தான் வர விடியல் தரப்போற என்ற பாடல்
ஸ்டாலின் தான் வர விடியல் தரப்போற என்ற பாடல்

தர்மபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே இருந்து திமுக சார்பில் ஸ்டாலின்தான் வரப்போறாரு பாடல் அறிமுக நிகழ்ச்சி, சைக்கிள் பேரணி நேற்று (பிப். 21) நடைபெற்றது.

சைக்கிள் பேரணியில் தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி கலந்துகொண்டு சைக்கிளை ஓட்டிச் சென்றனர். சைக்கிள் பேரணி அதியமான்கோட்டை அருகே நிறைவடைந்தது.

இதனையடுத்து, அதியமான் கோட்டையில் 'ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு' என்ற பாடல் பரப்புரை வாகனத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தர்மபுரி எம்பி செந்தில்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி இப்பாடலுக்கு நடனம் ஆடினர். எம்பி, எம்எல்ஏ நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில், தர்மபுரியில் உள்ள பாமக, அதிமுகவைச் சேர்ந்த தொழில்நுட்ப அணி இருபது விநாடிகள் ஓடக்கூடிய காணொலியை'ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு' என்ற பாடலை நீக்கிவிட்டு, சினிமா பாடல்களை இணைத்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி வைரலாக்கினர்.

தர்மபுரி எம்பி நடன காணொலியை கேவலப்படுத்துவதாக நினைத்து வைரலாக்கிய எதிர்க்கட்சி!

இது குறித்து அரசியல் விமர்சகர் கூறுகையில், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் புரமோஷனுக்காக சில காணொலிகள் வைரலாக்கப்படும். அதுபோன்று திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்காக வைரலாக்கப்பட்ட காணொலியை, மற்ற கட்சியினரும் அவர்களைக் கேவலப்படுத்துவதுபோல எண்ணி அவர்களை மக்களிடம் கொண்டுசேர்த்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க...கருணாநிதி இல்லாத முதல் சட்டப்பேரவைத் தேர்தல்...!

ABOUT THE AUTHOR

...view details