தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா தென்பெண்ணையாறு, காவிரியாறு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட, வழிபாடு நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், அரூர் அடுத்த டி. அம்மாபேட்டையில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள சென்னம்மாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் நேற்று (ஆகஸ்ட் 3) குவிந்தனர்.