தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று, திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பழைய தருமபுரி பகுதியில் செய்தியாளா்களை சந்தித்த அவர், ”இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை என மக்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை முதலமைச்சர் ஆதரிக்கிறார். வேலைவாய்ப்புகள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை.
தருமபுரியில் சிப்காட் தொடங்கி வைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அடிக்கல் நாயகனான முதலமைச்சர் அடிக்கல்லை மட்டும் நாட்டிவிட்டு எதையுமே செய்து முடிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது, அப்படியே கிடக்கிறது. கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் பெண்கள் விறகடுப்பில் சமைத்து கஷ்டப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.