தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தருமபுரி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்படும்போது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக தருமபுரியிலிருந்து காரிமங்கலம் நோக்கிச் சென்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர், விபத்து நடந்த பகுதிக்கு 108 அவசர ஊர்தி வருவதற்கு பத்து நிமிடம் காலதாமதம் ஆகும் என்பதை அறிந்து, படுகாயம் அடைந்தவரை மக்கள் தொடர்புத் துறை அலுவலர் வாகனத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.