தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எம். செட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி மாது (42). இவருக்கு மனைவி எல்லம்மாள் மற்றும் சக்தி, மதன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
கொலை வழக்கில் விடுதலையானவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு - railway tracks
தருமபுரி: பாலக்கோடு அருகே கொலை வழக்கில் விடுதலையான நபர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நண்பர்களுடன் பக்கத்து ஊர் திருவிழாவுக்கு சென்ற மாது இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறி மனைவி, மகன்கள் அவரைத் தேடி வந்துள்ளனர். காலை வீடு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில் மாரண்டஹள்ளியிலிருந்து பாலக்கோடு செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடப்பதை அறிந்து அங்கு விரைந்த மாதுவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவரது உடலை மீட்ட தருமபுரி ரயில்வே காவல் துறையினர் தற்கொலையா அல்லது கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்து வீசிச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொலை வழக்கில் கடந்த 10 ஆண்டு காலமாக சிறையிலிருந்துவந்த இவர் சமீபத்தில் விடுதலையானார்.