தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி திம்லாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் இன்று காலை தனது விவசாய நிலத்தில் மாட்டுக்காக தீவனப்பயிர் சோளத்தட்டை அறுக்கச் சென்றபோது மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கவனித்து பதறியடித்து ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் 8 அடி நீள மலைப்பாம்பு வனத் துறையிடம் ஒப்படைப்பு - Dharmapuri District palakod
தருமபுரி: பாலக்கோடு அருகே விவசாய தீவனப்பயிரில் 8 அடி நீள மலைப்பாம்பு வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரியில் 8 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சோளதட்டு விவசாய வயலில் இருந்த எட்டு அடி நீள மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த இரு மாதங்களில் பாலக்கோடு பகுதிகளில் இரண்டு மலைப்பாம்பு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாகனத்தில் அடிபட்டு இறந்த மலைப்பாம்பு! - மேளதாளம் முழங்க இறுதிச்சடங்கு!