தர்மபுரி: பாப்பாரப்பட்டி அடுத்த பி. கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (55). இவரது தம்பி அம்மாசி. இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக வழிப்பாதை தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 19) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அம்மாசி கையிலிருந்த மண்வெட்டியால் ராஜாவைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.