தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி பகுதியில் ஏராளமான லாரி பழுதுபார்க்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து கடை ஒன்றில் லாரி பழுது பார்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென லாரி டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட விபத்தால், தீ மளமளவென லாரி முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தருமபுரி அருகே லாரியின் டேங்க் வெடித்து தீ விபத்து - லாரி விபத்து
தருமபுரி: லாரியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பழைய தருமபுரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தருமபுரி அருகே லாரி டேங்க் வெடித்து தீ விபத்து
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேகமாக பரவிய தீ அடுத்த லாரியிலும் பற்றிக்கொண்டு எரிந்தது.
சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு பற்றி எரிந்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக, ஒரு லாரி முழுமையாக எரிந்து சேதமானது. மேலும் மற்றொரு லாரி ஒரு சில பகுதிகள் சேதமடைந்தன.