கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே உள்ள கோடிஹள்ளி பகுதியிலிருந்து ஆழ்துளை அமைக்கும் பணிக்காக 14 ஊழியர்களுடன் தமிழ்நாட்டில் உள்ள ஆத்தூர் நோக்கி இன்று ஆழ்துளை லாரி வந்துகொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பிலிகுண்டு அருகே லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி! - lorry accident
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டு அருகே ஆழ்துளை (போர்வெல்) லாரி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததோடு 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
2 பேர் பலி
இந்த விபத்தில் லாரிக்கு அடியில் 14 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த ராஜ்குமார், புவனேஸ்வர் ராஜ், நவீன், கண்ணன் உள்ளிட்ட 12 பேர் தீவிர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.