மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதையடுத்து, அமமுக சார்பில் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, அக்கட்சியின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அமமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட நிர்வாகி!
தருமபுரி: மாவட்ட அமமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் பூக்கடை முனுசாமி இன்று தனது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், அக்கட்சியின் தருமபுரி மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் பூக்கடை முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவால் அதிமுக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு பின் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகப் பூக்கடை முனுசாமி மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆதரவாளராக இருந்த அவர், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில், இன்று மீண்டும் அவர் அதிமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.