தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் 136 என அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் செப். 20 ஆம் தேதி உயிரிழந்தார்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றிவரும் 2 மருத்துவர்கள், 12 வயது குழந்தை, சுகாதார ஆய்வாளர், வங்கிப் பணியாளர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட 136 புதிய நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.