கடலூர்:சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து மிகப்பெரிய கடற்கரை கடலூரிலுள்ள வெள்ளி கடற்கரை. கரோனா பொதுமுடக்கத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடலூர் சில்வர் கடற்கரையில் முன் அறிவிப்பின்றி அனுமதி மறுப்பு: ஏமாற்றமடைந்த பொதுமக்கள்! - கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் எந்த வித முன்னறிவிப்பின்றி, வெள்ளி கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பொது மக்கள் வெகுவாக ஏமாற்றம் அடைந்தனர்.
சில்வர் கடற்கரையில் அனுமதி மறுப்பு
இந்த நிலையில், இன்று(ஜன.01) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்தனர். அவர்களுக்கு கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்பினர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முறையாக அறிவிப்பு வழங்காததால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளானதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டம்: விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு!