தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடலுறவின் போது டார்சர் செய்த கணவர்.. நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி.. கடலூரில் நிகழ்ந்த பகீர் சம்பவம்! - மதுபானம்

கடலூர் அருகே உடலுறவின் போது டார்சர் கொடுத்த கணவரை தோழியின் உதவியுடன் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 2, 2023, 6:38 PM IST

கடலூர்:கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே T.பாளையம் கிராமத்தில் புற்றுகோவில் என்ற பகுதி உள்ளது. கரும்புத் தோட்டம் நிறைந்த அந்த பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற குள்ளஞ்சாவடி போலீசார், அந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இறந்த நபர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உயிரிழந்த நபர் வடலூர் பார்வதிபுரம் ஊரை சேர்ந்தவர் ராஜசேகர் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜசேகரின் மனைவி மஞ்சுளாவை அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்

இதில் ராஜசேகருக்கும் மஞ்சுளாவிற்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளதாகவும், வீட்டை கவனிக்காமல் ராஜசேகர் திருப்பூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி ராஜசேகர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மஞ்சுளாவை உடலுறவின் போது கொடுமை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் என்ன?

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது பிரச்சனை குறித்து கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமநத்தம் ஊரை சேர்ந்த நெருங்கிய தோழி வினோதினியிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து ராஜசேகரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். அதற்காக வினோதினி வீட்டில் விருந்துக்கு அழைத்ததாக கூறி ராஜசேகரை அங்கு அழைத்துச்சென்ற மஞ்சுளா வினோதினியின் கணவர் சசிகுமார் மற்றும் அவரது நண்பர் மோகன் உதவியுடன் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்ட மஞ்சுளா மற்றும் வினோதினி குடும்பத்தினர் புற்றுகோவில் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் சடலத்தை வீசிச்சென்றுள்ளனர் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள்

இதையும் படிங்க:HBD Ilayaraja: 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. வாழ்த்து மழையில் ராஜாதி ராஜா..!

ABOUT THE AUTHOR

...view details