தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி - தேர்தல் விழிப்புணர்வு பேரணி

கடலூர்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

By

Published : Mar 27, 2019, 3:56 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.வேலு தலைமையில் தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.

இப்பேரணியில்விருத்தாசலம் சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், வட்டாட்சியர் அ.கவியரசு, கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கல்லூரியிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சார் ஆட்சியர் அலுவலகம் வரை மாணவ மாணவிகள் முழக்கமிட்டுச் சென்றனர்.

பொது மக்களிடையே வாக்களிப்பது ஜனநாயக உரிமை என்றும் வாக்களிப்பது நாட்டிற்கு நாம் செய்யும் சேவையாக கருதி 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details