தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மாவட்ட நிர்வாகம் வழங்கும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து வாக்களிக்க வேண்டும்’ - கடலூர் மாவட்ட ஆட்சியர் - கடலூர் மாவட்ட ஆட்சியர் வாக்களிக்கும் விளக்கம்

கடலூர்: கரோனா தொற்று காரணமாக வாக்களிக்க வருபவர்கள், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி தெரிவித்துள்ளார்.

Cuddalore District Collector
“மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்”-கடலூர் மாவட்ட ஆட்சியர்

By

Published : Mar 29, 2021, 12:37 PM IST

Updated : Mar 29, 2021, 12:45 PM IST

கடலூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 3001 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், 16 பொருள்கள் அடங்கிய உபகரணங்களை அனுப்பி வைக்கும் பணியினை, கடலூர் டவுன்ஹாலில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக, வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டும். வாக்கு மையங்களுக்கு செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முகக்கவசம், கிருமிநாசினி. கையுறை என அனைத்தும் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, மருத்துவ இணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க:’வீடுகள் இல்லாத மீனவர்களுக்கு கான்கிரீட் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்’ - முதலமைச்சர் வாக்குறுதி

Last Updated : Mar 29, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details