கடலூரில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் வெட்டிவேர் பயிரிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரியகுப்பம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வெட்டிவேர் பயிரிடுவதை தடுக்ககோரி கிரம மக்கள் கோரிக்கை
கடலூர்: நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் வெட்டிவேர் பயிரிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.
அதில், 'கடலோரத்தில் அமைந்துள்ள எங்கள் பெரியகுப்பம் கிராமத்தைச் சுற்றியுள்ள புஞ்சை விளைநிலங்களில் சாகுபடி செய்து வந்த சவுக்கு முந்திரி வகை அகற்றிவிட்டு தற்போது வெட்டிவேர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வெட்டிவேர் பயிரிடுவதற்கு ஒரு நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து டீசல் மற்றும் மின்மோட்டாரை பயன்படுத்தி நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சப்பட்டு வருகின்றனர்.
இதனால் எங்கள் கிராமத்தில் பல வீடுகளில் உள்ள கைப்பம்புகளில் தண்ணீர் வருவது குறைந்து வருவதோடு தண்ணீரில் தன்மை மாறி குடிப்பதற்கும் சமைப்பதற்கும் உகந்ததாக இல்லாமல் மாறி வருகிறது. அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள இடத்தில் வெட்டிவேர் பயிரிடுவதை தடுத்து நிறுத்தி எங்கள் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலத்தடி நீரையும், நீர் மாசுபாடாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.