கடலூர்மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி சென்னைக்கு குடிநீர் அளிக்கும் பிரதான ஏரியாக உள்ளது. இதன் முழு நீர்த்தேக்க உயரம் 47.50 அடியாகும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீரானது கொள்ளிடம் வழியாக கடலூர் மாவட்ட எல்லைக்குள் வந்த வண்ணம் உள்ளது.
வடவாறு வழியாக 2200 கன அடி நீர் வீராணத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் தற்பொழுது அதன் உயரம் 42.20 அடியாக உள்ள வீராணம் ஏரி, அதன் முழுக்கொள்ளளவை சில தினங்களுக்குள் எட்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.