கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று( ஜன 27) 50ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாணவர்களிடம் உரையாடினார்.
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் - உதயநிதி ஆதரவு - Cuddalore District latest News
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் காணொளி
அப்போது, திமுக தங்களுக்கு உறுதுணையாக இருக்கும், தங்களுடைய போராட்டம் வெற்றி பெறும் வரை உறுதுணையாக இருப்போம் என்று மாணவர்களிடம் உறுதியளித்தார்.